புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காணித்தகராறு காரணமாக யாழ் நீர்வேலி பகுதியில் கணவன் மனைவி இருவரும் நேற்றிரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவதுநீர்வேலியைச் சேர்ந்த மார்க்கண்டு உதயகுமார் (வயது 55) என்பவர் அவரது மனைவி வசந்தமலர் (வயது45) என்பவருக்கு ஏற்பட்ட சுகவீனத்துக்காக அயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பி இருக்கின்றனர்

இந்நிலையில் மரணமான உதயகுமார் வீட்டுக் கேற்றுக்குள் ஒழித்திருந்த அவரது மனைவி வசந்தமலரின் சகோதர் இவர்கள் இருவரையும் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான கணவனும் மனைவியும் அந்த இடத்திலேயே மயக்கமுற்று விழுந்ததாகவும் இதனைத் தடுக்கமுற்பட்ட அவர்களின் மகனும் குறித்த நபரினால் தாக்கப்பட்டு கடும் காயத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிருக்குப் போராடின நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட கணவன் மனைவி இருவருமே பலியான நிலையில் இவரது சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடும் காயத்துக்குள்ளாகி பலியானோரின் மகன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலைவெறித்ச் சம்பவத்துக்கு இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட காணித்தகராரே காரணம் எனத் தெரியவருகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top