உடல் பருமனாக உள்ள இளைஞர்கள், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க மீன் எண்ணெய் தொடர்ந்து சாப்பிடலாம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.உடல் பருமனாக உள்ளவர்களின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மீன் எண்ணெயின் பங்கு குறித்து ஒரு ஆய்வு
நடைபெற்றது.
உடல் பருமனாக உள்ள 13 முதல் 15 வயதுக்குப்பட்ட 78 இளைஞர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு தினமும் பிரெட் உடன் 1.5 கிராம் மீன் எண்ணெய் சேர்த்து வழங்கப்பட்டது.
இதுபோல் மற்றொரு பிரிவினருக்கு பிரெட் உடன் வெஜிடபிள் ஆயில் வழங்கப்பட்டது. பின்னர் 16 வாரங்கள் கழித்து அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு பரிசோதிக்கப்பட்டது.
உயர் ரத்த அழுத்தத்துக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது மீன் எண்ணெய் சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை குறைந்திருந்தது. ஆனால் வெஜிடபிள் ஆயில் சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் குறையவில்லை.
உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு உடல் பருமன் மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே உடல் பருமனான இளைஞர்கள் மீன் எண்ணெய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம் என தெரியவந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக