முதல்நாள் வீட்டினுள் கயிற்றில் தொங்கிய குடும்பஸ்தரின் சடலத்தைப் பார்வையிட்ட இளைஞன் மறுநாள் வயல்கரை அருகில் உள்ள பூவரசு மரம் ஒன்றில் வயரில் சடலமாகத் தொங்கிய சம்பவம் நேற்றுமுன் தினம் தென்மராட்சி தெற்கு கோவிலாக்கண்டிப் பகுதியில் இடம்பெற்றது.
இப்பகுதியில் கடந்த 3 ஆம் திகதி குடும்பஸ்தரான கலியுக வரதன் தெய்வராசா (வயது 44) என்பவர், மனைவி யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் வீட் டினுள் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சாவகச்சேரி பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி நீதிவானின் கவ னத்துக்குக் கொண்டு வந்தனர். நீதிவானின் உத்தரவின் பிர காரம் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
பின் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சட்ட வைத்திய அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
குடும்பஸ்தர் கயிற்றில் தொங்கியதை நண்பர்களுடன் பார்வையிட்ட நாவற்குழியில் இயங்கும் வீதிநிர்மாணக் கம்பனி ஒன்றில் வாகனக் கிளி னராக கடமையாற்றும் காலி பந்துரவைச் சேர்ந்த டபிள்யு ரி மதுசங்கர் என்னும் இளைஞர் நேற்று முன்னைய சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் வயல் வெளியினை அண்டிய பகுதி யில் காணப்பட்ட பூவரசு மர மொன்றில் வயரில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அப் பகுதியில் உள்ள படையினர் கிராம அலுவலர் ஊடாக சாவ கச்சேரி பொலிஸாருக்கு அறி வித்தனர். இளைஞரின் மரணத்துக்கான காரணம் தெரிய வில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக