பூமியை விட 15 மடங்கு பெரிய, பல ஆயிரம் டன் வைரங்களுடன் புதிய கிரகங்கள் இருப்பது சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்த கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். கார்பன் எனப்படும் கரிய தாதுக்கள் பூமிக்கடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும்போது ஒளிரும் தன்மை பெறுகின்றன. அவைதான் வைரமாக வெட்டி எடுக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகின்றன.
இத்தகைய கார்பன் படிமங்களை அதிகம் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்தை சுற்றிலும் ஏராளமாக இருப்பதாக பல்கலைக்கழக புவியியல் துறை ஆராய்ச்சி குழு தலைவர் வெண்டி பனேரோ தெரிவித்துள்ளார். ‘‘பூமியைவிட 15 மடங்கு பெரிய கிரகங்கள் இருக்கின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு வைர படிமங்களை கொண்டிருக்கலாம். காற்று இல்லாததால் உயிரினங்கள் வசிக்க வாய்ப்பற்ற இந்த கிரகங்களின் வைரங்கள் இருப்பு பல ஆயிரம் கோடி டன்களாக இருக்கும். அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகங்களின் கார்பன் படிமங்களில் பெரும்பாலானவை வைரமாக இருக்க வாய்ப்புள்ளது’’ என்று வெண்டி கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக