புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பூமியின் பண்புகளை மிக நெருக்கமாக கொண்டுள்ள முதன்மையான வேற்று கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதுடன், இதனனை உறுதி செய்து உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.Kepler 22-b என பெயரிடப்பட்டுள்ள இக்கிரகம் பூமியின் 2.0 வேர்ஷனுக்கு பரிந்துரைக்கப்படும் கோள்களுக்கு
முதன்மையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 600 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் இக்கிரகம், பூமியை விட 2.4 மடங்கு பெரியது. வெப்பநிலை சராசரியாக 22 பாகை செல்சியஸாக காணப்படுகிறது.

எனினும் இக்கிரகத்தில் திண்மம் மற்றும் திரவ பொருட்களா அல்லது வாயு பொருட்களாக அதிகமாக காணப்படுகிறது என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இக்கிரகத்தை கண்டுபிடித்த Kepler குழுவினர், இதே போன்று 1094 புதிய கிரகங்களை அவதானித்துள்ளனர்.

இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட kepler Space Telescope மூலம் இந்த அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  கடந்த பெப்ரவரி மாதம் பூமியை  ஒத்த கிரகங்கள் என கணிப்பிடப்பட்ட 54 கிரகங்கள் அவதானிக்கப்பட்டன. அதில் முதன்மையானதாக Kepler 22-b தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெப்லர் 22-பி கிரகம் தனது சூரியனிடமிருந்து கொண்டிருக்கும் தூரம், பூமியிலிருந்து எமது சூரியனுக்கு உள்ள தூரத்திலும் பார்க்க 15% வீதம் மாத்திரமே குறைவானது. இவ்வாறு பூமியை போன்று சம அளவிலான சுற்று வட்டப்பாதையை இக்கோள் கொண்டிருப்பதை வைத்து இது பூமியின் பண்புகளில் மேலும் ஒத்துபோகிறது.

ஒரு முறை சூரியனை சுற்றிவர 290 நாட்கள் பிடிக்கிறது. நாம் பெறும் சூரிய ஒளியிலும் பார்க்க 25% குறைவாக ஒளி பெறுகிறது. இக்கிரகம் கொண்டிருக்கும் மென்மையான வெப்பநிலை அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.

இக்கிரகத்தின் கண்டுபிடிப்பு அதிஷ்டவசமான புன்சிரிப்பை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது கெப்ரல் என குழுவின் மூத்த விஞ்ஞானி வில்லியன் புருகி தெரிவித்துள்ளார்.

இதுவரை கெப்ரல் தொலைகாட்டி மூலம் 2,326 புதிய கோள்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் 207 கோள்கள் பூமியை ஒத்தவை. பூமியை விட நான்கு மடங்கு பெரியவற்றை Super Earth என அழைக்கப்படவிருக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top