புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கையில் வட மாகாணத்திலுள்ள, இளைஞர்களுக்கு ஆணழகன், யுவதிகளுக்கு அழகிப் போட்டி நடாத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட மாகாண ஆணழகன், அழகிப் போட்டியில் அழகான உடல் அமைப்பு, ஆளுமை, அகத்தின் அழகு ஆகிய 3 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவுசெய்யப்படும் வெற்றியாளர்களுக்கு தலா 100,000 ரூபா பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. 

இந்தப் போட்டியில் 17-35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் பங்குபற்ற முடியும். 

இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்ப படிவங்களை ஒவ்வொரு கலாசாரப் பிரிவிலும் பெற்றுக்கொள்ள முடியும் என வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top