புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஞாயிறு மாலை 17h20 Breuil என்னும் கிராமத்திலுள்ள La Grande Borne என்னும் பகுதியில் ஒரு தொடருந்துக் கடவையைக் கடந்த ஒரு Opel Zafira கறுப்பு நிற கார் என்ன காரத்தினாலோ மீண்டும் பின்னோக்கிச் செலுத்தப்பட்டது.அந் நேரம் அங்கு மணிக்கு 100Km வேகத்தில் வந்த TER தொடருந்து காரை பயங்கரமாக மோதியது.
தூக்கி எறியப்பட்ட கார் 30 மீற்றர்களுக்கு மேல் தூக்கி வீசப்பட்டு இரண்டு துண்டாகச் சிதறியது. காரின் பின்பகுதி ஒன்று தொடருந்துடனேயே பிய்ந்து சென்றுள்ளது.

காரை ஓட்டி வந்தவரும் சில மாதங்களே ஆன கைக்குழந்தையும் 5 வயது மகளும் 7 வயது மகனும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். தாய் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவர் Hôpital de Villefranche-sur-Saône வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் இன்னமும் கோமா எனும் ஆழ்நிலை மயக்கத்திலேயே மிகவும் ஆபத்தான கட்டத்திலுள்ளார்.

வாகனத்தைச் செலுத்தி வந்த தந்தை Saint Priest (Rhône)ஐச் சேர்ந்த ஒரு தீயணைப்புப் படை வீரராவார். விபத்துக்குள்ளான தொடருந்து Gare de Lyon இருந்து பயணிகளின்றி இரு தொடருந்து செலுத்துனர்களோடும் ஒரு பயணச் சீட்டுக் கண்காணிப்பாளரோடும் மட்டுமே வந்துள்ளது.
செலுத்துனர்கள் இருவரும் உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். இருவரும் எதுவும் பாவித்திருக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. விபத்து நடந்த கடவை தடுப்புகளற்றது.

ஆனாலும் சமிக்ஞை விளக்குகள் உடையது ஒரு சிறு வீதியிலும் அமைந்துள்ள ஒரு கடவை என Rhône பிராந்தியத்தின் பாதுகாப்புப் பிரதிநிதி Jean-Pierre Cazenave-Lacrouts தெரிவித்துள்ளார். அயற் கிராமத்தில் வசிக்கும் பலியானவர்கள், ஒரு வீட்டிற்கும் அதன் தோட்டத்திற்கும் மட்டுமே செல்லும் அந்தச் சிறு பாதைக்கு எதற்காக வந்தார்கள் என விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

பிரான்சிலுள்ள 18000 வீதியோரக் கடவைகளுள் 3600 இந்த வகைக் கடவைகளே. இந்தக் கடவையில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த விபத்தும் ஏற்படவில்லை எனவும் Pierre Cazenave-Lacrouts தெரிவித்தார்.

இப்படியான பாரிய விபத்துக்களில் 2 யூன் 2008 இல் TER உடன் பேருந்து மோதியதில் 7 கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டதோடு 20 பேர் காயமடைந்த விபத்தின் பின்னர் இந்த விபத்தே அதிக உயிர்ச் சேதத்தை விளைவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top