இவை அதிர்ச்சியளிக்கும் CCTV கமராவில் பதிவான காட்சிகள். மது போதையில் தள்ளாடியபடி ரயிலில் இருந்து இறங்கும் பெண்ணொருவர் ரயில்வே பிளாட்பாரத்தில் அதுவும் ரயிலுக்கு கீழே விழுகிறார்.
பிரித்தானியாவின் South Yorks பகுதியில் உள்ள Barnsley ரயில் நிலையத்தில் தான் மேற்படி அதிர்ச்சிச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆனால் அதிஷ்டவசமாக கடுமையான காயங்களிலிருந்து தப்பிவிட்டார் இந்தப் பெண்.
சிறிய வெட்டுக்காயங்கள் உள்ளபடியால் குறித்த பெண் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சனநெருக்கடி மிக்க கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என இந்த வீடியோக்கிளிப்பை வெளியிட்ட பிரித்தானியப் போக்குவரத்துப் பொலிஸார் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ள Graham Bridges என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தப் பெண் அதிஷ்டவசமாகத்தான் கடுமையான காயங்களில் இருந்து தப்பியுள்ளார். சகபயணிகள் எச்சரிக்கையோடு குறித்த பெண்ணுக்கு உதவியுள்ளனர். என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக