புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுன்னாகத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து இரு காதல் ஜோடிகள் கிராம அலுவலர்களினால் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் புதன் கிழமை இடம்பெற்றது.
சுன்னாகம் மேற்கில் உள்ள தனியார் விடுதியில் பாலியல் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக கிராம
அலுவலர் மற்றும் பிரதேச செயலகம் என அயலவர்களினால் முறைப்பாடுகள் அனுப்பப்பட்டு வந்தன.

குறிப்பிட்ட தனியார் விடுதி பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்தமை தொடர்பாக பிரதேச சபையும் குறிப்பிட்ட விடுதி உரிமையாளரை அழைத்து விடுதியைப் பதிவு செய்யும் படியும் வலியுறுத்தி இருந்தது.

இந் நிலையில் நேற்று நண்பகல் கிராம அலுவலருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறிப்பிட்ட கிராம அலுவலர் ஏனைய அயல் கிராம அலுவலர்களையும் பிரதேச சபைத் தலைவர் பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரையும் இணைத்துக்கொண்டு பொலிசாரின் உதவியுடன் குறிப்பிட்ட விடுதியைச் சுற்றிவளைத்துத் தேடியபோது இரண்டு காதல் ஜோடிகள் வசமாக மாட்டிக்கொண்டார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top