சென்னை புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (40). ஷேர் ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு காசிமேடு வழியாக வந்து கொண்டு இருந்தார். அப்போது, புது வண்ணாரப்பேட்டை ஜீவா
நகரைச் சேர்ந்த அருள் என்ற வாலிபர் அந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி ஏறினார். டிரைவர் செல்வத்திடம் 1000 ரூபாயை நீட்டி, புதுவண்ணாரப்பேட்டைக்கு எவ்வளவு கட்டணமோ, அதை எடுத்துக் கொண்டு மீதி சில்லரை கொடு என்றார். தன்னிடம் சில்லரை இல்லை. ஆட்டோவை விட்டு இறங்கு என்று செல்வம் கூறினார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அப்போது செல்வத்தின் ஒரு காதை அருள் கடித்து துப்பினார். இதனால், வலி தாங்க முடியாமல் கத்தினார். அந்த பகுதி மீனவர்கள் ஓடி வந்து அருளை ஓட விடாமல் வளைத்து பிடித்தனர். பின்னர் டார்ச் லைட் வெளிச்சத்தில் துண்டிக்கபபட்ட காதின் ஒரு பகுதியை தேடிக்கண்டுபிடித்து எடுத்தனர். அந்த காதுடன் செல்வத்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மீனவர்கள் கொண்டு சென்றனர். ரைமணி நேரத்துக்குள் கொண்டு செல்லப்பட்டதால், ஆபரேஷன் மூலம் காது ஒட்டவைக்கப்பட்டது. அருள் காசிமேடு மீனவர் குப்பம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக