பிறந்ததும் தத்து கொடுத்த தன் மகளை 77 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த 100 வயது தாய் அளவுகடந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார். டச்சு நாட்டை சேர்ந்த மின்கா டிஸ்ப்ரோ மிக சிறிய வயதிலேயே டாக்காவின் தென் பகுதியில் அகதியாக குடிபெயர்ந்தார்.குடும்பத்தை விட்டு அனாதையான அவர் 8ம் வகுப்பு வரை படித்திருந்தார். டாக்காவில்
உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த 1928ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் மின்கா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த 1928ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் மின்கா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இதில் கர்ப்பமுற்ற அவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தையை வளர்க்க போதிய அனுபவம் மற்றும் வயது இன்மையால் தத்து கொடுத்தார்.
சமீபத்தில் தன் மகளை பார்க்கும் ஆர்வத்தில் தொடர்ந்து தேடி வந்தார். அவரது தேடல்களுக்கு பலனாக 77 ஆண்டுகள் கடந்த நிலையில் தன் மகளை கண்டுபிடித்துள்ளார்.
பெட்டி ஜேன் என்ற தன் பெயரை ரூத் லீ என்று மாற்றி கொண்ட மின்காவின் மகளும் தனது தாயை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். லீ நார்வே நாட்டை சேர்ந்த பாதிரியார் குடும்பத்தாரால் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.
மார்க் லீ விண்வெளி வீராங்கணையாக பணியாற்றி வந்துள்ளார். தனது பணிக் காலத்தில் 4 முறை விண்கலத்தில் சாகச பயணம் மேற்கொண்டதாகவும், 517 முறை உலகை சுற்றி வந்துள்ளதாகவும் பெருமையுடன் தெரிவிக்கிறார் லீ.
மேலும் இவர் கடந்த 2006ஆம் ஆண்டு தற்செயலாக பல முறை தாங்கள் இருவரும் சந்தித்து கொண்டதாக தெரிவிக்கும் லீ, ஆனால் உறவு முறை தெரியாமல்தான் இந்த சந்திப்புகள் நடந்ததாக கூறுகிறார்.
தற்போது பேத்தி கொள்ளுப் பேத்திகளுடன் வாழ்ந்து வரும் லீ, 100 வயதில் தாயை சந்தித்த உற்சாகத்தில் இருக்கிறார். இவர்களுடைய சந்திப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக