புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நீங்கள் படத்தில பாக்கிற அப்புவும் ஆச்சியும் தான் பிரித்தானியாவிலேயே வயதான தம்பதியினர் ஆவர். இவர்கள் சமீபத்தில் தங்களது 75 ஆவது ஆண்டு திருமண நிறைவு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.Robert, Susan Erskine என்ற வயதான தம்பதியினர் அவர்களது குடும்பத்தில் மூன்று தலைமுறையினருடன்
வாழ்ந்திருக்கிறார்கள். புதுவருடத்தன்று 75 ஆவது ஆண்டு வைர விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

தற்போது கணவரான Erskine க்கு 100 வயதும் மனைவிக்கு 99 வயதும் ஆகி விட்டது. 1937 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலப்பகுதியில் சில காலம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் கூட இருந்திருக்கிறார்கள்.

பிரித்தானியாவின் வயதான தம்பதியாக Mrs Erskine கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் தான் பிரித்தானியாவின் பழமையான தம்பதி என்பதனை நம்ப முடியவில்லை. வியப்பாக உள்ளது.

இவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்ததில் பெருமையடைகிறோம். இப்போதைய வாழ்க்கை முறையில் சில ஆண்டுகள் குடும்பம் நடத்துவதே பெரும் பாடு.

இவர்கள் 75 ஆண்டுகளாக சந்தோசமாக குடும்பம் நடாத்துகிறார்கள். நிச்சயம் இவர்களைப் பாராட்டித் தான் ஆக வேணும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top