ஆஸ்திரேலியாவின் சிட்னியில் புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஸ்கயி ப்ளாக்பர்ன் என்ற பெண் புதுவகை உணவு வகைகளை தயாரித்துள்ளார். இவர் பூச்சிகள் குறித்த கல்வியில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். வீட்டிலேயே பல்வேறு வகையான பூச்சிகள் மற்றும் புழுக்களை வளர்க்கிறார். அதன் அடிப்டையில் பூச்சிகளைக் கொண்டு பல்வேறு உணவுகள் தயாரிக்க முடியும் என்று கூறும் ஸ்கயி, இதற்கு மூலப்பொருளாக பூச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாவு பவுடர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.
தனது தயாரிப்பை நண்பர்களுக்கு பரிசாக அளித்து தயாரிப்பு முறையையும் விளக்கி வருகிறார். இதற்கு வரவேற்பு எதிர்பார்த்ததைவிட அதிகம் உள்ளதாக கூறும் ஸ்கயி, இந்த மாவில் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கும் என்கிறார். தோட்டத்தில் நவீன முறையில் புழுக்களும் பூச்சிகளும் சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவால் பக்க விளைவுகள் இருக்காது. நிச்சயம் ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கும். இவற்றை கொண்டு ரொட்டி, பிஸ்கட், கேக்குகள் மட்டுமின்றி சாக்லெட், லாலி பாப் போன்றவையும் தயாரித்து வருகிறேன். இந்த வருட கிறிஸ்துமசுக்கு எனது புதிய தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக