ஏழு அடி உயரமான முன்னாள் கூடைப்பந்து நட்சத்திரம் தான் உலகிலேயே உயரமான அரவாணி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். Lindsey Walker என்று தற்சமயம் பெண்ணாக அறியப்படும் இவர் முன்னர் Greg என்ற பெயரில் ஆணாக இருந்தவர்.கடந்த இரண்டு வருடங்களாக பெண்ணாக வாழ்ந்து வரும் இவர் போன வருடக் கடைசியில் தான் பெண்ணாக மாறுவதற்கான பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சையினை செய்து கொண்டுள்ளார்.
இவர் தான் உலகின் உயரமான அரவாணி என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.சாதனையை நிலைநாட்டிய 25 வயதான குறித்த அமெரிக்கர் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களிலும் விருப்பம் கொண்டவர்.
பல்வேறு விதமான உடற்பயிற்சிகளைச் செய்தல், பாரம் தூக்குதல், மோட்டர்சைக்கிள் பந்தயம் போன்றவற்றில் அயராத ஈடுபாடு கொண்டவர். படிப்பிலும் படு கெட்டிக்காரியாம். இவரின் பிரா அளவு 38B .
உலகின் உயரமான அரவாணி என்ற பெருமையைப் பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார் Lindsey Walker .
0 கருத்து:
கருத்துரையிடுக