சீனாவில் பெண்ணுக்கு மாரடைப்பு என்று வந்த அவசர அழைப்பை ஏற்று விரைந்து சென்ற டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பெண்ணுக்கு பதில் இருந்தது செல்ல நாய்.சீன தலைநகர் பீஜிங்கின் ஜிசெங் மாவட்ட அரசு அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு சமீபத்தில் போன்
அழைப்பு வந்தது. அதில் பேசியவர், எங்க
அழைப்பு வந்தது. அதில் பேசியவர், எங்க
வீட்டுல 6 வயசு பொண்ணுக்கு மாரடைப்புங்க.. சீக்கிரமா வந்து பாருங்க.. என்று பதற்றத்துடன் கூறினார். உடனடியாக ஆம்புலன்சில் டாக்டர்கள் அந்த குடியிருப்புக்கு சென்றனர். போனில் தகவல் தெரிவித்தவரின் வீட்டுக்கு சென்ற போது, அங்கிருந்த ஒருவர் டாக்டர்களை உள்ளே அழைத்து சென்றார். அங்கு அவருடைய மனைவி அழுது அழுது சோர்வாக இருந்தார். கிட்டத்தட்ட மயக்கம் அடையும் நிலையில் இருந்தார். டாக்டர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளிக்க ஓடினார். அப்போது, அவங்களுக்கு ஒண்ணுமில்லே. இங்க வாங்க.. என்று சொல்லி ஒரு திசையை காட்டினார். அங்கு டாக்டர்கள் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அங்கு ஒரு நாய் சுருண்டு கிடந்தது. என்னவென்று விசாரித்த போது, அந்த தம்பதி வளர்க்கும் பெண் நாய்க்குதான் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆத்திரத்தை அடக்கி கொண்ட டாக்டர்கள், கால்நடை மருத்துவமனைக்கு நாயை கொண்டு செல்லுங்கள். மனிதர்களுக்கு அவசர மருத்துவ சேவைக்கான போன் எண்ணை தவறாக பயன்படுத்தாதீர்கள் என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்தனர். இந்த சம்பவம் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பாக பேசப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக