தந்தையின் கண் முன்பு ஒரு முதலை சிறுமியை கொன்று விழுங்கியது. இந்தோனேசியாவில் கிழக்கு நுசாடென்காரா மாகாணத்தில் உப்புநீர் ஆறு ஓடுகிறது. அதில் ஆமைகள் மற்றும் அழகிய மீன்கள் அதிக அளவில் உள்ளன.
அங்கு 10 வயது சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரருடன் சுற்றுலா வந்து இருந்தாள். ஆற்றங்கரைக்கு சென்ற சிறுமி அங்கு நீந்தி கொண்டிருந்த ஆமைகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென ஆற்றில் தவறி விழுந்து விட்டாள்.
உடனே, அந்த ஆற்றில் இருந்த முதலை அவளை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதனால் அவள் அலறி கூச்சலிட்டாள். அதை பார்த்ததும் சில மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை ஓடி வந்தார்.
அதற்குள் அவளை அந்த முதலை கொன்று விழுங்கியது. தனது கண் முன்னே இக்கொடூர சம்பவம் நடந்தும் தான் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தந்தை நின்று துடித்து கொண்டிருந்தார். இந்த தகவலை அதிகாரி விக்டர் மாடோ வாடன் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக