ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பஸ் ஸ்டாண்டில், பஸ்சிற்குள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த அசாம் வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கமுதி பெருநாழி அருகே, திம்னாதபுரத்தைச் சேர்ந்த, ஜோசப் மகள் கவிதா,23. தூத்துக்குடி மீன் கம்பெனியில் வேலை பார்த்து
வந்தார். இதே கம்பெனியில் லோடுமேனாக உள்ள, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, மோட்டி என்பவரும், கவிதாவும் காதலித்து வந்தனர். கவிதாவை, அசாமிற்கு வருமாறு மோட்டி அழைத்தார். இதை மறுத்த கவிதாவுக்கும், மோட்டிக்கும் தகராறு ஏற்பட்டது. உடன் வேலை பார்க்கும் சாந்தி, மோட்டியை தட்டிக் கேட்டார். இந்நிலையில், சாந்தி மற்றும் ஷாபிகா ஆகியோருடன் கவிதா, பொங்கல் விடுமுறைக்காக நேற்று, தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு, அரசு பஸ்சில் ஊர் திரும்பினார்.
இவரை பின்தொடர்ந்து, அதே பஸ்சில் வந்தார் மோட்டி, சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் மாலை, 5.30 மணிக்கு பஸ் நுழைந்த போது, சாந்தி, கவிதா ஆகியோரின் மார்பில் கத்தியால் குத்திவிட்டு, மோட்டி தப்பி ஓடிவிட்டார். கவிதா அதே இடத்தில் பலியானார். காயமடைந்த சாந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாயல்குடி போலீசார், மோட்டியைத் தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக