குழந்தையை சட்டவிரோதமாக மற்றுமொருவருக்கு கைமாற்றிய 22 வயதுடைய தாய் ஒருவர் மாத்தளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக மஹவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்
பேரிலேயே தாய் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கடந்த 2 ஆம் திகதி மாத்தளை வைத்தியசாலையில் பிறந்த தனது குழந்தையை அங்குள்ள வைத்தியர் ஒருவரிடம் ஒப்படைத்ததாக அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வைத்தியர் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையில் குழந்தையை பொறுப்பேற்ற போதிலும் அதனை சட்ட அங்கீகாரத்துடன் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக