பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் வீடு ஒன்றின் சுவரை இடித்துக்கொண்டு கார் ஒன்று உள்ளே நுளைந்துள்ளது. ரோட்டில் சென்றுகொண்டு இருந்த காரில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அதன் ஓட்டுனர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரியரிங்
வீலுக்கும் சில்லுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் கார் ரோட்டில் இருந்து விலகிச் சென்று ஒரு வீட்டின் படலையை இடித்து பின்னர் அப்படியே சென்று வீட்டுச் சுவரையும் உடைத்து உள்ளே நுளைந்துள்ளது. இக் கார் வீட்டின் இருக்கை அறையின் சுவரை இடித்துகொண்டு உள்ளே சென்றுள்ளது. இதில் விநோதமான விடையம் என்னவென்றால் அங்கே 72 வயதான பாட்டி ஒருவர் இருந்திருக்கிறார்.
நரம்பியல் நோய் தாக்கத்துக்கு உள்ளான அப் பாட்டி, அதுவரை நேரமும் ஹாலில் இருந்துவிட்டு தனது ஊண்டு தடிகளின் உதவியுடன் மெல்ல எழுந்து சமையல் அறைக்குச் சென்றுள்ளார். அவர் சமையல் அறைக்குச் சென்ற சில நொடிகளில் கார் பலத்த சத்தத்துடன் வந்து மோதியுள்ளது. இப் பாட்டி இருந்த நாற்காலிக்கு முன்னதாகவே சுவரை உடைத்துக்கொண்டு வந்த கார் இறுதியாக நின்றுள்ளது. இன்னும் தான் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என 72 வயதாகும் மூதாட்டி தெரிவித்தார். தான் தற்செயலாக எழுந்து சமையல் அறைக்குச் சென்றதாகவும் ஒருவேளை தான் ஹாலில் இருந்திருந்தால் நிச்சயம் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நடந்த சம்பவத்தைப் பார்த்தால் எல்லாம் விதி என்று தான் கூறவேண்டும்.
0 கருத்து:
கருத்துரையிடுக