புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நுவரெலியாவை சேர்ந்த மாணவி ஒருவர் தனது உயர்தரப்பரீட்சையின் முடிவை ஏற்க மறுத்து, உளரீதியாக பாதிப்படைந்து தற்கொலை செய்துள்ளார்.19 வயதையுடைய குறித்த மாணவி கல்வியில் சிறந்து விளங்கியவர் என்றும் சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த சித்தியடைந்த அவர் உயர்தரத்திலும் சிறந்த
பெறுபேறுகளையே எதிர்பார்த்திருந்தார்.

எனினும், மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி கிடைத்ததை கடந்த 25ம் திகதி இணையத்தளம் மூலம் பார்வையிட்ட மாணவி அன்றைய தினத்திலிருந்து மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என மாணவியின் தந்தை பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, மனமுடைந்த அம்மாணவி அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டு வாரகாலமாக அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பலனளிக்காது இன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top