புகைப்பட தேடலுக்கு எல்லோருக்கும் தெரிந்த வழிகள் கூகிள் இமேஜ், யாஹூ இமேஜ் போன்றன. இவற்றை போல சிறந்த புகைப்படங்களை பெற பல தளங்கள் உதவுகின்றன.1..PICSEARCH: இந்த தேடுதளத்தில் தேடப்படும் படங்களை விரைவாக காண்பிப்பதுடன் அந்த புகைப்படத்தின்
அளவினையும் காட்டுகிறது.
அத்துடன் புகைப்படங்கள் எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்த தெரிவு செய்து தேடும் வசதியுமுண்டு இந்த வசதியினை ADVANCED SEARCH மூலம் பெறலாம்.
PICSEARCH
2. INCOGNA: இந்த தேடுதளத்தின் சிறப்பு என்னவெனில் உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தேடினால் தேடிய சொல்லுக்கான அனைத்து புகைப்படங்களையும் இது காண்பிக்கும். பின்னர் ஒரு படத்தை தெரிவு செய்தால் அதோடு தொடர்புடைய படங்களை காண்பிக்கும்.
INCOGNA
3. TINEYE: இது ஓர் மாறுபட்ட புகைப்பட தேடுதளமாகும். ஓர் புகைப்படத்தை உங்கள் கணணியில் இருந்து UPLAOD செய்து அல்லது அந்த புகைப்படத்தின் URL ஐ இந்த தளத்தில் பதிவு செய்து தேடினால் குறித்த படம் எந்தெந்த இணைய தளங்களில் உள்ளது என காட்டும்.
TINEYE
4. GINIPIC: இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். பல புகைப்பட தளங்களில் இருந்து இந்த தேடல் இயந்திரம் மூலம் படங்களை பெறலாம்.
GINIPIC
0 கருத்து:
கருத்துரையிடுக