புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தென்னிலங்கையில் கோகிலாம்பாள் மீண்டும் உருவாகி உள்ளார்.பல வருடங்களுக்கு முன்னர் மிகவும் விறுவிறுப்பாக பேசப்பட்டது கோகிலாம்பாள் படுகொலை வழக்கு.கணவனை கொன்று எருக் கிடங்குக்குள் கோகிலாம்பாள் புதைத்து இருந்தார்.இதை ஒத்த பாணியில்
கணவனை கொன்று வீட்டுக்கு அருகில் உள்ள கழிவு நீர் குழிக்குள் சடலத்தை போட்டு புதைத்து இருக்கின்றார் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

ஆனால் கடந்த 09 வருட காலமாக இப்படுகொலை மிகவும் இரகசியமானதாகவே இருந்து வந்திருக்கின்றது.

பொலிலாரின் 119 அவரச தொலைபேசி இலக்கத்துக்கு வந்த அழைப்பு ஒன்றுதான் இப்படுகொலையை மிக நீண்ட காலத்துக்கு பின் கண்டுபிடிக்கின்றமைக்கு காரணமாகி இருக்கின்றது.

ஒரு பெண் அவரது சட்டபூர்வ கணவரை கொன்று விட்டு கள்ள புருஷனுடன் கடந்த ஒன்பது வருடமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்.

நித்திரையில் இருந்த கணவனை கொன்று இருக்கின்றார். பின் வீட்டுக்கு அருகில் இருந்த கழிவு நீர் குழிக்குள் சடலத்தை போட்டு புதைத்து இருக்கின்றார்.

கணவன் காணாமல் போனமை தொடர்பாக உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வித்தியாசம் வித்தியாசமான கட்டுக்கதைகளை சொல்லி இருக்கின்றார்.

சோதிடத்தின்படி கெட்ட காலம் நடக்கின்றமையால் வீட்டை விட்டு கணவன் சென்று இருக்கின்றார் கணவனின் தாய்க்கு சொல்லி இருக்கின்றார்.

அவசர தொலைபேசி அழைப்பு மூலம் இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றமையை அடுத்து நெலுவ பொலிஸ் நிலைய பொலிஸார் கடந்த 21 ஆம் திகதி புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டனர்.

கணவன் மூலம் பிறந்த குழந்தைக்கு கொலை இடம்பெற்றபோது வயது மூன்று. கணவனின் புகைப்படங்களை திட்டமிட்டு மெல்ல மெல்ல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எரித்து சாம்பலாக்கியிருக்கின்றார் கொலைகார மனைவி. இதனால் பிள்ளைக்கு தகப்பனின் முகம் தற்போது ஞாபகமே இல்லை.

பொலிஸார் கொலைகார மனைவியையும், கள்ளப் புருஷனையும் கைது செய்து உள்ளனர். பொலிஸ் மிரட்டல்களை அடுத்து இருவரும் கொலை பற்றிய விபரங்களை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

கொலை செய்யப்பட்டவருக்கு வயது 27.

கைது செய்யப்பட்ட இருவரும் பத்தேகம நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top