புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனி புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை தயாரித்து அதனை இஸ்ரேலுக்கு விற்பனை செய்ய உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களுள் இது மிகவும் நவீனமானது என்பது குறிப்பிடத்தக்கது.68 மீற்றர் நீளமுள்ள இந்த
நீர்மூழ்கிக் கப்பலை HDW என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. தற்போது தண்ணீருக்கு அடியில் நடத்தப்படும் சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவித சோதனைகளும் நடத்திய பின்னர் இந்த நவீனரக நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் என்று ஜேர்மனி ஊடகங்கள் அறிவித்துள்ளது.

உயர் தொழில் நுட்பங்களை கொண்ட இந்தக் கப்பல், நவீன டால்ஃபின் வகையைச் சேர்ந்தது. அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக் கூடியது. ஏற்கெனவே இஸ்ரேல், இந்த டால்ஃபின் ரகத்தைச் சேர்ந்த மூன்று நீர்மூழ்கி கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து எதிர்வருகிற 2013ம் ஆண்டிற்குள் குறைந்த பட்சம் இன்னும் இரண்டு கப்பலாவது ஜேர்மனியிலிருந்து இஸ்ரேலுக்கு விற்கப்படும் எனவும் தெரிகிறது. இந்த விற்பனைக்கு ஜேர்மனியின் வரி கட்டுவோர், மானியம் வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு, இஸ்ரேலுக்கு இனி நீர்மூழ்கிக்கப்பல்களை விற்பதில்லை என்று ஜேர்மனி முடிவு செய்திருந்தது. இதையடுத்து இரண்டு நாடுகளின் அரசு அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் கருத்து வேறுபாடுகள் தோன்றின.
இந்நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனியரை எதிர்த்து வந்த நிலையிலும், யூதர்களின் குடியிருப்புகளுக்கு அனுமதி அளித்து வந்த நிலையிலும் இந்த கருத்து வேறுபாடுகள் தகர்க்கப்பட்டு இஸ்ரேல் மீது ஜேர்மனிக்கு நல்லெண்ணமும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top