அம்பாறை கல்ஒயா சந்தி பாலத்திற்கு அருகில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிசார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று அம்பாறை, பிரதான வீதியில் அமைந்துள்ள கல்ஒயா சந்தி பாலத்திற்கு அருகில்.சடலமாக மீட்கப்பட்டவர்
செங்கல் உற்பத்தி செய்யும் வாடியில் வேலை செய்து வந்துள்ளார் எனவும் அம்பாறை நகர் கார்மீக பிரதேசத்தச் சேர்ந்த, இரண்டு பிள்ளையின் தந்தையான தரங்க (29 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செங்கல் உற்பத்தி செய்யும் வாடியில் வேலை செய்து வந்துள்ளார் எனவும் அம்பாறை நகர் கார்மீக பிரதேசத்தச் சேர்ந்த, இரண்டு பிள்ளையின் தந்தையான தரங்க (29 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று காலை வேலைக்கு சென்றவர், இரவு 12 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் தேடிச்சென்ற போது பொல்லால் தாக்கப்பட்ட காயத்துடன் செங்கல் உற்பத்தி செய்யும் வாடிக்கு செல்லும் பாதையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அம்பாறை பொலிசார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக