பிரபல பொப் இசை பாடகி ஒய்ட்னி ஹாஸ்டன்(48) இன்று மரணமடைந்தார். இத்தகவலை அவரின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டன் போஸ்டர் வெளியிட்டுள்ளார். சிறு வயது முதலை சர்ச்சுகளில் பாடல்கள் பாட தொடங்கியவர் ஒய்ட்னி ஹாஸ்டன்.கடந்த 1980ம் ஆண்டு முதல் 1990ம்
ஆண்டு வரை புகழின் உச்சத்தில் இருந்தார். இசை உலகின் தங்க பெண் என வர்ணிக்கப்பட்ட ஒய்ட்னி தி பாடிகார்ட், வெயிட்டிங் டு எக்ஸ்ஹெல் போன்ற படங்களின் பின்னணி இசை மூலம் பிரபலமானார்.
போதை பொருட்களை உபயோகபடுத்தும் குணமுடைய ஹாஸ்டன், பாடகர் பாபி ப்ரோனை திருமணம் செய்தார். இவரது இசை ஆல்பம் அமெரிக்காவில் மட்டும் 55 மில்லியன்களை தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக