13 வயது பணிப்பெண்ணை வீட்டில் பூட்டிவிட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காங்குக்கு 6 நாள் பயணமாக சென்ற தம்பதியினரின் கொடூரச் செயல் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. டில்லியில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வீட்டில் வைத்து பூட்டப்பட்ட அந்த சிறுமி ஜன்னல் ஒன்றைத் திறந்து
உதவிகோரி கூக்குரல் எழுப்பியதும்தான் அவர் வீட்டில் அடைபட்டுக் கிடந்தது அனைவருக்கும் தெரியவந்தது.
உதவிகோரி கூக்குரல் எழுப்பியதும்தான் அவர் வீட்டில் அடைபட்டுக் கிடந்தது அனைவருக்கும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. இதில் கொடுமை என்னவெனில் தம்பதியர் இருவருமே மருத்துவர்கள்தான்! வெளிநாடு திரும்பிவிட்டு வந்து சிறுமியின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக வீட்டுக்குள் காமிராவையும் பொருத்தி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தரகர்கள் மூலம் இந்த சிறுமி கொண்டுவரப்பட்ட நாள் முதல் ஒரு பைசா சம்பளமும் கூட கொடுக்கவில்லையாம். இதுதொடர்பாக அந்த மருத்துவ தம்பதியினர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை பதிவுசெய்த பின்னர் சிறுவர் இல்லத்துக்கு அவரை அனுப்பிவைக்க போலீசார் முடிவுசெய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக