புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தெற்கு அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகாணம் ஹில்ஸ் வில்லி பகுதியை சேர்ந்த 37 வயதான ரிச்சாட் லீ நாரிஸ் எனபவர் 15 வருடங்களுக்கு முன் ஒரு துப்பாக்கி குண்டு விபத்தில் தாக்கப்பட்டார்.இதில் அவரது முகத்தில் மூக்கு மற்றும் வாய் பகுதி முற்றிலும் சிதைந்தது.பற்களை இழந்த அவருக்கு நாக்கின் ஒரு பாகம் மட்டுமே உள்ளதால் அவருக்கு ருசி பார்க்க முடியும். ஆனால் வாசனைகளை நுகர்ந்து பார்க்க முடியாத நிலையில் இருந்தார்.

 மேலும் நெற்றியில் கூடுதலாக தையல்கள் போடப்பட்டுள்ளதால் அவரது கண் பார்வையிலும் குறைபாடு இருந்தது.அவரது முகம் நிறைய தையல் போட்ட தழும்புகள் நிறைந்தும், முகம் சிதைந்தும் இருந்ததால் அவர் முகமூடி ஒன்றை அணிந்தே வெளி இடங்களுக்கு செல்வார்.

அவரை எல்லோரும் விநோதமாக பார்ப்பர். இதனை தவிர்க்க அவர் பெரும்பாலும் வெளியே செல்வது இல்லை. இரவு நேரங்களில் மட்டுமெ வெளியே செல்வார்.

அவருக்கு தற்போது முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு புதிய ஒரு முகம் கிடைத்துள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேரிலாண்ட் மருத்துவ மையத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு மூக்கு மற்றும் உதடுகள் சீர்செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக அவர் தொலைத்த நுகர்வு தன்மையை திரும்ப பெற்றுள்ளார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்த தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் ரோட்ரீகெஸ் கூறியதாவது:இந்த அறுவை சிகிச்சையில் அவருக்கு வேறொருவருடைய மேல் மற்றும் கீழ்தாடை, பற்கள், மூக்கு, நாக்கின் எஞ்சிய பகுதி மற்றும் முக திசுக்கள் பொறுத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 36 மணி நேரம் வரை நீடித்தது. தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உறுப்பு தானம் செய்யப்பட்ட ஒருவரிடன் முகத்தில் இருந்து இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரது முகச்சாயல் இவரிடம் இல்லை. ஒரு புது முகச்சாயலைப் பெற்றுள்ளார்.
தற்போது அவர் தனது முகத்தை உணரத் தொடங்கியிருக்கிறார். அவரால் இப்போது முகச்சவரம் செய்யவும் பல் துலக்கவும் முடிகிறது. அதிக செலவுடன் அதிக நேரம் நடந்த நடத்தப்பட்ட முதல் அறுவை சிகிச்சை இதுவே ஆகும். இதில் வெற்றி பெற்றுள்ளோம் என கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top