கள்ளக் காதலிக்காக கனடாவில் இருந்து வந்து தனது சொந்த மனைவியைக் கொடூரமான முறையில் கொலை செய்தவனை நேற்று நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 6ம் திகதி மீசாலையில் குகதாஸ் சாந்தினி என்ற பெண் அவரது
வீட்டிலிருந்து கடத்திச்செல்லப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிறிதொரு இடத்திலிருந்து அவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
வீட்டிலிருந்து கடத்திச்செல்லப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிறிதொரு இடத்திலிருந்து அவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
இதன்போது கனடாவிலிருந்து திரும்பிய கணவர் உட்பட ஐந்து பேர் பொலிஸரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆயினும் முதலாம் சந்தேக நபர் தவிர ஏனையவர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்ற போது நீதிபதி, சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் செல்ல அனுமதித்ததோடு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக