புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியத்தைத் தருகின்றது. தனது மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப்
பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்குச் செல்லாமல் கட் அடித்து விட்டு கொம்பியூட்டர் கேம் விளையாடிய தனது 13 வயதேயான மகனை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை கொடுத்துள்ளார் குறித்த கோபக்காரத் தந்தை. கம்போடியாவில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த சிறுவனை அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் மீட்டனர். பொலிஸார் குறித்த சிறுவனின் கழுத்தில் இருந்த ஆமைப்பூட்டை உடைத்து சங்கிலிப் பிணைப்பை நீக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரான Cheth Vanny கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைக்குச் செல்லாமல் இன்டர்நெட் கபேக்கு சென்றதைக் கண்ட தகப்பன் கடும் கோபமாகி விட்டார்.

பொதுமக்கள் முன்னிலையில் இவனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று கருதிய தகப்பன் இவ்வாறு பூட்டுப் போட்டுப் பூட்டியுள்ளார். ஆனால் அதற்காக இப்படியான தண்டனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை சிறுவர் துஷ் பிரயோகத்துக்குள் உள்ளடங்குகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top