சீனாவின் பிரபல ‘குங்பூ’ நடிகையான பாய்ஜிங் (28) (Bai Jing) தனது கணவரான ஸோ செங் ஹய்யினால் (Zhou Cheng Hai) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இதனைச் சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.44 வயதான இவர் நடிகையான
பாய்சிங்கை கடந்த 2010 ஆண்டிலேயே திருமணம் செய்திருந்தார். இந்தக் கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கொலையுண்ட நடிகையான பாய்ஜிங் திரைப்படங்களில் நடித்தும் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் தோன்றியும் பிரபலம் பெற்ற ஒரு நடிகையாவார் .

குங்பூ விங்சுன் (Kung Fu Wing Chun) என்ற திரைப்படம் இவருக்குப் பிரபல்யத்தைத் தேடிக் கொடுத்திருந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக