புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பான் நாட்டில் கிழக்கு பகுதியில் கடலில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளியாக பதிவான இந்நிலநடுக்கம் காரணமாக மத்திய ஜப்பான் பகுதி முழுவதும் ஆட்டம் கண்டது.இதனால் ஜப்பான் மக்களிடம் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்
சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. கடலோரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவியது.

ஆனால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் அறிவித்தனர். கடந்த ஆண்டு மார்ச் 11ம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top