பெண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி மாணவர்கள் 14 பேரை முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றிவந்த குற்றச்சாட்டின் பேரில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹஸலக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹஸலக பகுதியைச் சேர்ந்த 32 வயதான...
இச்சாரதி பொறுப்பற்ற வகையில் வாகனத்தைச் செலுத்தியதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முச்சக்கரவண்டியொன்றில் 14 மாணவர்களை ஏற்றிச்செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இம்முச்சக்கரவண்டிச் சாரதியைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
14 மாணவர்களை ஏற்றிச்செல்வதற்கான வசதி முச்சக்கரவண்டியில் இல்லையெனவும் இச்சாரதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஒழுங்கு விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக