புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரித்தானியப் பெண் ஒருவரின் வீட்டு லாச்சியில் இருந்த ஒருசோடித் தோடு 500,000 ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியானவை எனத் தெரியவந்துள்ளது. சுமார் 35 வருடமாக இத்தோடு ஒரு லாச்சிக்குள் இருந்திருக்கிறது. இதனை தற்செயலாக விற்க முற்படும்போதே அதன் அருமை
தெரியவந்துள்ளது.

என்றால் பாருங்களேன். 1930ம் ஆண்டு ரொமேனிய நாட்டு அரசர் ஒருவர் பிரித்தானியாவில் வசித்துவந்துள்ளார். இவர் பெயர் கரோல் - 2 ஆகும். இந்த அரசர் எலீனா என்னு அழைக்கப்படும் தனது மனைவிக்கு இத்தோட்டை பரிசளித்துள்ளார்.

பின்னர் எலீனா இத்தோட்டை தனது நண்பி வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். எலீனா 1977ம் ஆண்டு இறந்துவிட்டார். அன்று முதல் இந்த ஒருசோடி தோடு, ஒரு வீட்டின் லாச்சியில் சுமார் 35 வருடங்களாக இருந்திருக்கிறது.

மிகவும் விலையுயர்ந்த முத்துக்களையும், மற்றும் வைரக் கற்களையும் கொண்ட இத்தோட்டின் தற்போதைய பெறுமதி சுமார் 500,000 பவுண்டுகள் (அரை மில்லியன்) ஆகும். இதனை அந்த வீட்டின் உரிமையாளர் விற்க்க முனைந்தவேளையே இவ்வளவு விடையங்களும் வெளியாகியுள்ளது.

அக்காலத்தில் அரசர்கள் அணியும் ஆபரணங்களில் அவர்கள் இலச்சினைகள் பொறிக்கப்படுவதும், மற்றும் எந்த ஆண்டு அது தயாரிக்கப்பட்டது என்பதுபோன்ற விபரங்கள் பொறிக்கப்படுவது வழக்கம்.இதனை வைத்தே பொற்கொல்லர்கள் இந் நகை குறித்து கண்டறிந்துள்ளனர். எமது ஊரில் இதுபோல நகைகளை விற்கச்சென்றால், குறைந்த விலையைக் கொடுத்து நகையை சுருட்டிவிடுவார்கள்.




ஆனால் மேற்கத்தைய மக்கள் அப்படியல்லவே. இங்கே சட்டம் ஒழுங்கு சரியாகத் தன் கடமையைச் செய்வதால், எல்லோருக்கும் அதன்மேல் ஒரு பயம் இருக்கிறது.அதற்கும்மேலாக அதனை மீறக்கூடாது என்ற எண்ணமும் இருக்கிறது. எது எவ்வாறு இருந்தாலும், அதிஷ்டம் கதவுகளைத் தட்டும் என்று இதனைத் தான் சொல்லுவார்கள் போலிருக்கிறது !

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top