உலகை விரல் நுனியில் கொண்டு வரும் இன்டர்நெட் இன்று கல்லூரி மாணவ, மாணவிகளின் பொழுது போக்கு சாதனமாக மாறி விட்டது. கல்விக்கும், உலக அறிவுக்கும் பயன்பட வேண்டிய இன்டர்நெட் இப்போதெல்லாம் சில மாணவ, மாணவிகளுக்கு காதல் சாட்டிங் செய்யவே
பயன்படுகிறது.
பயன்படுகிறது.
இதன் மூலம் எங்கோ ஒரு மூலையில் இருப்பவரை கூட நண்பராக்கி அவரோடு அளவளாவுவது வாடிக்கையாகி விட்டது. சிலர் இப்படி சாட்டிங் செய்வதை தங்களின் பலான விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
அப்படி ஒரு மாணவனும், மாணவியும் சாட்டிங்கில் ஈடுபட்டு போலீஸ் நிலையம் வரை சென்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. நாகர்கோவிலிலும் இதுபோன்ற சம்பவம் நடந்து போலீஸ் நிலையம் வரை விவகாரம் சென்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன் விவரம்:-
நாகர்கோவில் புறநகர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பிரபல தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். பொழுது போக்குக்காக சாட்டிங்கில் ஈடுபட்ட போது சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதல் ரசம் சொட்டும் வகையில் பேசத் தொடங்கினர்.
இதில் ஈர்க்கப்பட்ட மாணவியை சந்திக்க விரும்புவதாக மாணவர் கூறினார். மாணவியும் சம்மதிக்க, அதற்கு ஏதுவான நாளை கூறும்படி மாணவர் கேட்டார். அதன்படி பெற்றோர் வீட்டில் இல்லாத இரவு நேரத்தை தேர்வு செய்து மாணவி, மாணவருக்கு தகவல் அனுப்ப அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு வருவதாக பதில் கூறினார்.
மாணவி குறிப்பிட்ட நாள் வந்ததும் அந்த மாணவர் சென்னையில் இருந்து புறப் படும் பகல் நேர குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகர் கோவிலுக்கு புறப்பட்டார். இரவு 10 மணி அளவில் ரெயில் நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. சிறிதுநேரம் அங்குமிங்கும் சுற்றி நேரத்தை கடத்தி விட்டு நள்ளிரவு ஆனதும் அந்த வாலிபர் குறிப்பிட்ட மாணவியின் வீட்டுக்கு சென்று சிக்னல் கொடுத்தார்.
உடனே மாணவியும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து மாணவரை வரவேற்க அன்று விடிய, விடிய இருவரும் தூக்கமின்றி இன்பமாக பொழுதை கழித்தனர். அதி காலை விடிந்ததும் மாணவர் வந்த வழியாக திரும்பிச் சென்று அதே குருவாயூர் எக்ஸ்பிரசில் சென்னைக்கு சென்று விட்டார்.
முதல் நாள் சந்திப்பு, அதில் கிடைத்த இன்பம், இதற்கு இடைஞ்சல் ஏற்படாத நிலை, மாணவன், மாணவி இருவரையும் மீண்டும் மீண்டும் தவறு செய்ய வைத்தது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் கசந்தது. மாணவி, மாணவரை ஒதுக்கத் தொடங்கினார். மேலும் இங்கு வர வேண்டாம் என்றும் கூறினார்.
ஆனால் ருசி கண்ட பூனை சும்மா இருக்காது என்பது போல அந்த மாணவர், மாணவியை மீண்டும் சந்திக்க விரும்பினார். இதனால் மாணவி சிக்னல் கொடுக்காத நாளில் அவரைத் தேடி சென்னையில் இருந்து வந்து விட்டார். இதில் அவர் மாணவியின் வீட்டுக்கு சென்ற போது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
பிறகு என்ன... அந்த மாணவர் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு விசாரணை நடந்தது. விவரங்கள் குறித்து பெரியவர்கள், போலீஸ் அதிகாரிகள் விவாதித்தனர். இறுதியில் பெண்ணின் எதிர்காலம் கருதி அந்த மாணவர் எச்சரித்து விடப்பட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக