முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டுவது கண்கள். கண்ணின் கருவிழிகள் கருப்பாக இருப்பது அனைவருக்கும் இயல்பானது. சிலரது கண்கள் பழுப்பாகவும், சிலரது கண்கள் நீலமாகவும் இருக்கும். கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் ஏற்படுகின்றன
பழுப்பு கண்களை உடையவர்கள் அதற்கேற்ப மேக் அப் போட்டால் கண்களை அட்ராக்டிவாக காட்ட முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பழுப்பு நிற கண்ணிற்கு மேக் அப்
பழுப்பு நிற கண்களுக்கு ஏற்ற ஐ ஷேடோவை வாங்கி பயன்படுத்தலாம். அடர் நிற ஷேடோக்கள் பழுப்பு நிற கண்ணிற்கு ஏற்றது. கருப்பு, நீலம், ப்ளு க்ரே, பர்ப்பிள் போன்றவை பழுப்பு நிற கண்களுக்கு ஏற்றது.
ஐ லைனர், மஸ்காரா போன்றவை கருப்பு அல்லது சில்வர் ஷேடோவில் இருக்கவேண்டும். கீழே உள்ள கண் இமைக்கு திக்காக போடுவதன் மூலம் கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும். மெட்டாலிக் நிறங்களான கோல்டு, காப்பர், சில்வர் ஐ ஷேடோக்கள் பளுப்பு நிற கண்களுக்கு ஏற்றது.
லைட் கலர் ஐ லைனர் பயன் படுத்துவன் மூலம் கண்களை எடுப்பாக காட்டலாம். லைட் ப்ளு ஐ லைனர் பென்சில் கொண்டு கீழ் இமைகளில் லேசாக வரையவேண்டும்.
நமக்கு சரும நிறத்திற்கு ஏற்ற ஐ ஷேடோ பயன்படுத்துவது ஹைலைட் ஆகும். அதேசமயம் உதட்டிற்கு டார்க் கலர் லிப் கிளாஸ் பயன்படுத்தலாம். அழகியல் நிபுணர்கள் கூறியுள்ள இந்த ஐ மேக் அப் போட்டால் பழுப்பு நிற கண்கள் பக்காவாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக