புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பட்டாபிராம் திருவள்ளுவர் நகர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( கூலி தொழிலாளி). இவரது மனைவி லட்சுமி. லட்சுமிக்கும் ஆவடியைச் சேர்ந்த மோசஸ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சீனிவாசன் வீட்டில் இல்லாத சமயத்தில் இருவரும்
ரகசியமாக சந்தித்து
உல்லாசமாக இருந்து வந்தனர்.
இது அக்கம்பக்கத்தினர் மூலம் சீனிவாசனுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். கள்ளக்காதலை விடாவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன லட்சுமி கடந்த 8-ந்தேதி திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தனது மனைவியை மோசஸ் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகித்தார். உடனே பட்டாபிராம் போலீஸ் நிலையம் சென்று மனைவியை மோசஸ் கடத்திச்சென்று விட்டதாகவும், அவைர கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்கும்படியும் புகார் கொடுத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், லட்சுமி சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவரை மீட்டு சீனிவாசனிடம் ஒப்படைத்தனர். நேற்று இரவு லட்சுமி, தனக்கு விவாகரத்து தரும்படி சீனிவாசனிடம் கேட்டார். அதற்கு சீனிவாசன், நமக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவர்களின் எதிர்காலம் கருதி நாம் சேர்ந்து வாழவோம் என்று கூறினார்.
ஆனால் அதை லட்சுமி ஏற்க மறுத்தார். நான் உங்களை விவாகரத்து செய்வது உறுதி. இனி என்னிடம் எதுவும் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு படுத்து தூங்கினார். ஆனால் சீனிவாசனுக்கு தூக்கம் வரவில்லை. குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் வாழ விரும்பும் இவளை தீர்த்துக்கட்டுவதை தவிர வேறு வழி இல்லை என்று எண்ணினார். குழந்தைகள் நன்றாக தூங்கிய பிறகு நைலான் கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
இன்று காலை அவர் பட்டாபிராமில் இருந்து பஸ்சில் புறப்பட்டு எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து சரண் அடைந்தார். பட்டாபிராம் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் சீனிவாசனை கைது செய்து அங்கு உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top