வவுனியா ஹோட்டல் ஒன்றில் 16 வயதுடைய சிறுமியுடன் தங்கியிருந்தார் என்ற காரணத்தால் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான 67 வயதுடைய நபரொருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த
வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை வெள்ளியன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சட்டத்தரணிகள் கருத்தினை செவிமடுத்த நீதிபதி அவருக்கு 1 இலட்சம் ரூபா பண பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன் அவருடைய கடவுச்சீட்டினையும் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக