புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சூரியன் குறித்து இதுவரை ஆய்வு எதுவும் மேற்கொள்ளவில்லை. ஏனெனில் மற்ற கிரகங்களை விட சூரியன் கடுமையான வெப்ப கிரகமாகும்.இந்த நிலையில் சூரியன் குறித்து ஆய்வு மேற்கொள்ள புதிய வடிவிலான செயற்கை கோளை உருவாக்க ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் முடிவு
செய்துள்ளனர்.

இதற்கான செயற்கை கோள் 2 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. அதற்கான பணி இங்கிலாந்தின் ஆஸ்டிரியம் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த திட்டத்தின் விஞ்ஞானி டேனியல் முல்லா கூறியதாவது:-

பூமியை விட சூரியன் 8 மடங்கு வெப்பம் கொண்ட கிரகமாகும். எனவே 500 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தை தாங்க கூடிய வகையில் உலோக கலவையிலான தகடுகளால் செயற்கை கோள் தயாரிக்கப்படுகிறது.

அந்த செயற்கை கோள் 8 கன சதுர மீட்டர் அளவில் வடிவமைக்கப்பட உள்ளது. அதன் வெளிப்புற தகடு 30 சென்டி மீட்டர் கனமாக இருக்கும். அதன் மீது வெப்பத்தை தாங்க கூடிய டைட்டானியம் உலோக கலவையிலான ‘ஷீட்’ பொருத்தப்படும்.

சூரியனில் இருந்து வெளியாகும் காந்த புயல் செயற்கை கோள்களின் தகவல் தொடர்பை பாதிப்பது குறித்தும், காந்த அலைகள் உருவாவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும்.

வருகிற 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் இது விண்ணில் செலுத்தப்படும். சூரியனுக்கு அருகே 4 1/2 கோடி கி.மீட்டர் தூரத்தில் அதாவது புதன் கிரகத்தின் அருகில் இது நிலை நிறுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்படும்.

இந்த செயற்கை கோள் தயாரிக்கப்பதற்கான உதிரி பாகங்களை பல ஐரோப்பிய நிறுவனங்கள் வழங்க உள்ளன. இதில் அமெரிக்காவும் உதவ உள்ளது என்று தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top