களனி - கோனாவலை பிரதேசத்தில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டடின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 600 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடஹமுல்ல நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக