பெரம்பூர் சத்தியவாணி முத்துநகர் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). ஆட்டோ டிரைவரான ஆனந்த் பெரிய பாளையத்தை சேர்ந்த சுந்தரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் அஸ்வினி என்ற
மகளும், அஸ்வின் என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளன.
மகளும், அஸ்வின் என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளன.
இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் ஆனந்துக்கு தொடர்பு ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி இருக்கிறார். இதை நம்பி கீர்த்தனா தன்னையே அவரிடம் இழந்தார். இதில் அவர் 6 மாத கர்ப்பிணி ஆனார். ஆனால் ஆனந்த் அவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறி மறுத்து விட்டார்.
இதை தொடர்ந்து பெரவள்ளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெரியபாளையத்தில் ஆனந்த் தலைமறைவாக இருப்பதாக கூறி போலீசார் அங்கு சென்றனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதற்கிடையே ஆனந்த் இன்று பெரவள்ளூர் வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரேவதி, ஏட்டு ஆனந்த் ஆகியோர் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் பஸ் நிலையத்தில் கண்காணித்தனர். பஸ்சில் இருந்து இறங்கிய அவரை மாறுவேடத்தில் இருந்த போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக