கட்டுநாயக்க விமான நிலையத்தில் வீடியோ கமராக்களை பொருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமான நிலையத்திற்கு வருகை தருவோர், செல்வோர் பற்றிய தரவுகளை பதிவு செய்து கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.குமார் குணரட்னம் என்ற நபர் வேறு பெயரில் இந்த நாட்டுக்குள் பிரவேசித்திருந்தமையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வரும் மற்றும் நாட்டை விட்ட வெளியேறுவேர் பற்றிய தகவல்களை திரட்டக் கூடிய முறைமைகள் தற்போது கிடையாது.
அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வீடியோ கமராக்களை பொருத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக