யாழ்.பல்கலைக்கழக கனிஸ்ட மாணவனை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சிரேஸ்ட மாணவர்கள் மூவரை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் மற்றும் வகுப்புத்தடை விதித்து இடைநிறுத்தியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக
நிர்வாகம் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
நிர்வாகம் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 28 ஆம் திகதி யாழ்ப்ப்பாண பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பீட மாணவனான தில்லைநாதன் தனராஜ் (வயது 22) என்ற மாணவன் சிரேஸ்ட மாணவர்களினால் பகிடிவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை இடைநிறுத்தியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக