யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியில் இளம் பெண் ஒருவருடைய சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் கண்டுபிடித்துள்ளனர்.மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என உறவினர்களால் கூறப்படும் கே.தங்கமணி (வயது 23) என்ற இளம் பெண்ணே
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீடு ஒன்றில் தங்கவைக்கப்பட்டு இருந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து உறவினர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவலை கொடுத்ததை அடுத்து சடலம் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என உறவினர்களால் கூறப்படுகிறது. எனினும் இவரது மரணம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாளை வியாழக்கிழமை இந்த இளம் பெண்ணின் சடலம் உடற்கூற்றியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.
அச்சேழு=அச்செழு
பதிலளிநீக்கு