யாழ். இணுவில் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று (11) புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ். இணுவிலில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவி பேத்தியாருடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் அவரின் உடலில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமாக இந்த மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ஆரம்பித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக