புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சுமார் 127 பயணிகளுடன் பறந்துகொணடிருந்த பயணிகள் விமானமொன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. போஜா எயார் விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நகருக்கு சென்றுகொண்டிருந்தது.
எனினும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஹுஸைன் அபாத் கிராமத்தில் இவ்விமானம் வீழ்ந்ததாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான பஸ்ல் அக்பர் தெரிவித்துள்ளார்.

விமானம் விழுந்த இடம்தீப்பற்றியது. இவ்விமானம் முற்றாக அழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார். தீயணைப்பு படையினரையும் மீட்புப் படையினரையும் அனுப்பிவைத்துள்ளோம். மேலும் மீட்புக்குழுக்கள் வந்துகொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top