70 அடி ஆழமான பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த 9 வயதுடைய தங்கையை 13 வயது அண்ணன் துணிகரமாகக் காப்பாற்றிய சம்பவமொன்று சிலாபம் அத்துவன என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.சிங்கள- தமிழ் புத்தாண்டு தினத்தன்று குளிப்பதற்காக கிணற்றுக்குச் சென்ற
ஒன்பது வயதுடைய அச்சினி தனஞ்ஜய எனும் சிறுமி கிணற்றில் விழுந்துள்ளார்.
ஒன்பது வயதுடைய அச்சினி தனஞ்ஜய எனும் சிறுமி கிணற்றில் விழுந்துள்ளார்.
அதைக் கண்ட அவளது அண்ணனான 13 வயதுடைய நிபுன் தனஞ்ஜய உடனடியாக கூச்சலிட்டு அயலாரின் உதவியைக் கோரினார் எனினும் எவரும் அங்கு விரையாததைத் தொடர்ந்து கிணற்று வாளியின் கயிற்றை மரமொன்றில் கட்டி அதன் உதவியுடன் நிபுன் தனஞ்ஜய எனும் சிறுவன் கிணற்றில் இறங்கி தனது தங்கையைக் காப்பாற்றியுள்ளான்.
அதன்பின்னர் எவ்வாறு தங்கையுடன் கிணற்றிலிருந்து மேலே வருவது என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவனது கூக்குரலைக் கேட்ட அயல் வீட்டார் அக்கிணற்றடிக்கு உடனடியாக விரைந்து வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் தங்கையின் இடுப்புப் பிரதேசத்தைக் கயிற்றால் நன்கு சுற்றியுள்ளதுடன் அதன் பின்னர் மேலே உள்ளவர்கள் கயிற்றை மெது மெதுவாக மேலே தூக்கி அவர்கள் இருவரையும் கிணற்றிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.
மேற்படி சம்பவம் நிகழ்ந்து சுமார் பத்து நிமிடங்கள் வரையில் எதுவிதப் பயமுமின்றி மிகவும் துணிச்சலுடன் மேற்படி சிறுவன் செயற்பட்டுள்ளமை தொடர்பாக அனைவரும் நிபுன் தனஞ்ஜய சிறுவனைப் பாராட்டி வருகின்றனர்.
கிணற்றிலிருந்து மேலே எடுத்த அச்சினியை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சிகிச்சை பெற்றதன் பின்னர் அவர் நேற்று முன்தினம் (16) வைத்திய சாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக