கோவிலம்பாக்கத்தில் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோவிலம்பாக்கம் முருகன் கோயில் தெருவில் வசிப்பவர் தினகரன் (28). வெல்டிங் தொழிலாளி. இன்று காலை, குடிபோதையில் தெருவில் நடந்து வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்ற 10 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன் கன்னத்தில் கடித்துவிட்டார். வலியால் சிறுமி கதறினாள். சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்ததால் தினகரன் ஓடிவிட்டார். காயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, தினகரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக