ஆப்கானிஸ்தானில் 15 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய மாமனார், மாமியாருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து காபூல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சிறுமியின் கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவளது கணவன் இராணுவத்தில் பணிபுரிகிறான்.
மனைவியிடம் மிக தவறான முறையில் நடந்து கொண்டு, அந்த சிறுமியை கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த பெண்ணை குடும்பத்தின் அவமானச் சின்னமாக கருதி பல மாதங்கள் பாதாள அறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சிறுமியை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி உள்ளனர்.
இந்த பெண்ணின் நகங்களை பிடுங்கி, சூடு போட்டு, உடலில் மின்சாரத்தை செலுத்தி மிக மோசமாக கொடுமைப்படுத்தி உள்ளனர். இதன் பின் இவளது அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக காவல்துறையினர் வந்து இந்த சிறுமியை காப்பாற்றியதுடன், மாமனார், மாமியாரையும் கைது செய்தனர். இதன் பின் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவளது கணவரை தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக