புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மன் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது, இதற்கு கப்பலின் கேப்டன் தான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியின் டிராவெமூண்ட் என்ற துறைமுகத்தில் உர்த் என்ற கப்பல் மீது, நில்ஸ் ஹோல்கெர்ஸ்ஸன் என்ற கப்பல் வேகமாக வந்து மோதியது.இதனால் உர்த் கப்பலில் 16 சதுர மீட்டர் அளவிற்குபெரிய ஓட்டை ஒன்று விழுந்தது. இருப்பினும் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.இது குறித்து கடற்கரை காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கார்ஸடென் டொஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், கப்பல் விபத்திற்கு எஞ்சினின் வேகத்தை துறைமுகத்திற்கு ஏற்றவாறு மாற்றாதது தான் காரணம் என்று தெரிவித்தார்.இதற்கு கப்பலின் கேப்டன் தான் காரணம் என்றும், விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும் தெரிவித்தார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top