புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிறந்து 45 நாட்களே ஆன தங்கள் பெண் குழந்தையை சுடுகாட்டில் வைத்து உயிருடன் எரிக்க முயன்ற பெற்றோர், போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிலக்குவா என்ற பகுதி, தலைநகர் டெல்லியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சுடுகாடு ஒன்றில் குழந்தையின் அழும் சத்தம் கேட்ட அறங்காவலர் ஒருவர், உடனே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை எரிக்க முயன்ற பெற்றோரையும், அவருடன் இருந்த குழந்தையின் சித்தப்பாவையும் கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது, குழந்தையின் தாய் 35 வயது நிரம்பிய பாரதி ராணி கூறியது, கடந்த ஆண்டு தங்களுக்கு பிறந்த குழந்தை கடுமையான நோய்வாய்ப்பட்டு இறந்தது என்றும், மற்ற குழந்தைகளும் நோயால் அடிக்கடி பாதிப்புக்குள்ளனார்கள் என்றும் கூறினார், இந்நிலையில், மீண்டும் தான் கருவுற்றிருந்த

போது தாங்கள் ஒரு சாமியாரை அணுகி ஆலோசனை கேட்டதற்கு, பிறக்கப்போகும் குழந்தையை உயிருடன் எரித்து பலி கொடுத்தால் மற்ற குழந்தைகள் எப்போதும் நலமுடன் இருப்பார்கள் என்று கூறினார் என்றும், அதனால் தான் தாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினார். மேலும், இந்த கொடூர செயலுக்கு தூண்டுதலாக இருந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர் என தெரிகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top